ஆந்திராவில் சோகம் – கார் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் பலி

ஐதராபாத்:
ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே வேகமாக வந்த இன்னோவா கார் மீது லாரி மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. 
இந்த விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.