ஆந்திர மாநிலத்தில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கத்தாழை மீன் ஒன்று 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையிலான கத்தாழை மீன் சிக்கியது. மருத்துவ குணம் கொண்ட கத்தாழை மீனை ஏலம் எடுக்க வியாபாரிகள் ஆவலுடன் திரண்ட நிலையில் அந்த மீன் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
கத்தாழை மீனின் அடி வயிற்றில் உள்ள நெட்டி என்றழைக்கப்படும் காற்றுப்பை ஒயின் மற்றும் மருந்து தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதால், வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.