அகமதாபாத்: முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இண்டீஸ் அணி. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இண்டீஸ் அணி 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் சஹல் 4, சுந்தர் 3, பிரசித் 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.
