ஜகார்த்தா :
இந்தோனேசியாவின் யோககர்த்தா மாகாணத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தேடல் மற்றும் மீட்பு அலுவலக செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
பந்துல் மாவட்டத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து ஒரு தாழ்வான சாலை வழியாகச் சென்றபோது, ஓட்டுநரால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து வலதுபுறம் இருந்த உயரமான தரையில் மோதியதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் இஹ்சான் கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான பேருந்தில் மொத்தம் 40 பயணிகள் இருந்தனர். ஜாவா தீவின் தெற்கு கடற்கரையில் உள்ள பராங்ட்ரிடிஸ் சுற்றுலா தலத்திற்கு பயணம் செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
நான்கு பேர் பலத்த காயங்களுடன், மேலும் நான்கு பேர் லேசான காயங்களுடன் அருகிலுள்ள மூன்று மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படியுங்கள்…
ஆந்திராவில் சோகம் – கார் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் பலி