நடிகர்
தனுஷ்
மற்றும்
ஐஸ்வர்யா
சமீபத்தில் தங்கள் பிரிவை அறிவித்தனர். இவர்கள் பிரிவுக்கு பல தரப்பிலிருந்து பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த பிரிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இதனால்
ரஜினி
மிகவும் சோகத்தில் இருக்கின்றார். தன் பிள்ளைகளின் நலனை உணராமல் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்ததால் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கின்றார் ரஜினி.
தற்போது தன் இல்லத்தில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருக்கின்றார் ரஜினி. இவரின் கோபத்தை தணிக்க லதா தன் மகள் ஐஸ்வர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். நீங்கள் இருவரும் மீண்டும் இணைந்தால் தான் அப்பாவின் கோபம் தணியும் என்று லதா ஐஸ்வர்யாவிடம் பேசிவருகிறார். இதன் காரணமாக மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழும் எண்ணத்தில் ஐஸ்வர்யா இருப்பதாக தெரிகிறது.
விவாகரத்தான பிறகு தனுஷால் மீண்டும் அதை செய்யமுடியுமா? கொஞ்சம் கஷ்டம் தான் போலயே..!
ஆனால் தனுஷ் தன் முடிவை மாற்றிக்கொள்ளும் படி இல்லையாம். இதைப்பற்றி யோசிக்க ஐஸ்வர்யாவிடம் தனுஷ் கால அவகாசம் கேட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தனுஷுடன் ஆரம்பகாலத்தில் சேர்ந்து நடித்த நாயகி ஒருவர் தனுஷிடம் படவாய்ப்பு கேட்டு வருகிறாராம். இதற்கு ஆரம்பத்தில் பார்க்கலாம் என்ற தனுஷ், அந்த நடிகை தொடர்ந்து வாய்ப்பு கேட்டுவந்ததால் தனக்கு தெரிந்த திரையுலக நண்பர்களிடம் சிபாரிசு செய்துவருகிறாராம்.
இந்த செய்தி ஐஸ்வர்யாவின் காதுக்கு செல்ல கடும் கோபத்திற்கு ஆளானாராம். தனுஷ் வேறொரு நடிகைக்கு அனைவரிடமும் சிபாரிசு செய்வது ஐஸ்வர்யாவிற்கு பிடிக்கவில்லை. எனவே தனுஷின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா.
தன் நெருங்கிய நண்பர்களிடம் தனுஷ் இன்னும் மாறவேயில்லை என புலம்பி வருகிறாராம். இருப்பினும் இவர்களது குடும்பத்தார் தொடர்ந்து இவர்களை சமாதானம் படுத்தும் முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கர் ராஜு வெற்றி விழாவில் பாடி அசத்திய அனூப் ரூபன்ஸ்!