சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில்
ரஜினிகாந்த்
நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.
பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பிற்காக கோலிவுட் வட்டாரமே ஆர்வமுடன் காத்திருந்தது. இவரின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது.
இந்நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் – தனுஷும் பிரியவுள்ளதாக அண்மையில் அறிவித்தனர். தங்களின் 18 ஆண்டு கால திருமண வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டதாக இருவரும் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகளின் விவாகரத்து முடிவை ரஜினி சிறிதும் விரும்பவில்லையாம். குழந்தைகளின் நலனுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என ஆர்டர் போட்டாதாகவும் தகவல்கள் வெளியானது.
அட போங்கப்பா.. இதே வேலையா போச்சு: மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட போனி கபூர் பட அப்டேட்..!
தனுஷ்
– ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு முழுமையாக தனிமையிலேயே தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருகிறாராம் ரஜினி. அதுமட்டுமில்லாமல் தனக்கு மிக நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே தற்போது பேசி வருகிறாராம். மேலும் குடும்ப நண்பர்கள் மூலமாக தனுஷ், ஐஸ்வர்யா இடையில் பேச்சுவார்த்தை நடத்தவும் ரஜினி முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ரஜினியிடம் கதை சொல்ல பல இயக்குனர்கள் தற்போது முயற்சித்து வருகின்றனராம். ஆனால் ரஜினி தற்போதைக்கு கதை கேட்கும் மனநிலையில் இல்லை என்றும், கொஞ்ச நாள் தனிமையில் இருக்க விரும்புவதாகவும் சில காலம் கழித்து நானே உங்களை தொடர்பு கொள்கிறேன் என கூறியுள்ளாராம். இந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!