இலங்கையில் கடந்த 26ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி வரையான 10 நாட்களுக்குள் 222 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் 10 நாட்களில் 10,651 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் ஒமிக்ரோன் கோவிட் மாறுபாடின் தன்மைக்கமைய, சமூகத்தில் நோய் அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறியுடைய கோவிட் நோயாளிகள் இருக்கலாம் என பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தயர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்வதற்கு அனைவரும் சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.