வில்மிங்டன்:
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் திட்டம் குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளதாவது:
ரஷ்யா உக்ரைனை எந்த நாளும் ஆக்கிரமிக்கக் கூடும். உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் அதிக மனித உயிர் இழப்பு ஏற்படும்.
ஆனால் எங்கள் தயாரிப்புகள் மற்றும் எங்கள் பதிலின் அடிப்படையில், ரஷ்யாவிற்கும் அதிக ராணுவ இழப்பு ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
உக்ரைன் தலைநகர் கெய்வை விரைவாகக் கைப்பற்றுவதற்கு ரஷ்யா முயலும் போது 50,000 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்… ரஷ்யாவை கண்டித்து உக்ரைனில் மக்கள் போராட்டம்