புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. இதன்மூலம் இந்தியா, ஐந்தாவது முறையாக ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த போட்டியில் இந்திய அணியினர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், மிக உயர்ந்த நிலையிலான அவர்களின் ஆட்டத்திறன், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான மற்றும் திறமையான கைகளில் உள்ளது என்பதை காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.