அகமதாபாத்:
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் கோலி 4 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதி வேகமாக 5 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி நேற்று படைத்தார்.
ஒருநாள் போட்டிகளில் தனது 249வது இன்னிங்ஸை கோலி விளையாடினார். சொந்த மண்ணில் அவருக்கு இது 96வது இன்னிங்ஸ். இதில் 5000 ரன்களை கடந்ததன் மூலம் சச்சின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
சச்சின் தனது 121 இன்னிங்ஸ்களிலும், ஜாக் காலிஸ் 130 இன்னிங்ஸிலும்
5 ஆயிரம் ரன்களை எடுத்திருந்தனர். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 138 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டினார்.
இதுவரை 100 இன்னிங்ஸ்களுக்குள் இந்த சாதனை படைத்த ஒரே பேட்ஸ்மேன் கோஹ்லிதான்.அதே நேரத்தில் சொந்த மண்ணில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கோலி 4வது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கர் சொந்த மண்ணில் 6976 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பாண்டிங் 5,521 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்க மண்ணில் காலிஸ் 5186 ரன்கள் குவித்தார். இந்திய மண்ணில் கோஹ்லி இதுவரை 5002 ரன்கள் எடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்…
அதிவேகமாக 100 விக்கெட் – டாப் 5 பட்டியலில் இடம்பெற்றார் சாஹல்