சிறு விவசாயிகள் முன்னேற்றத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது – பிரதமர் மோடி பேச்சு

ஐதராபாத்:
ஐதராபாத்தின் பதன்சேருவில் உள்ள சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் 50-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நமது கவனம் என்பது 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள சிறு மற்றும் மிகவும் தேவையான விவசாயிகளின் மீது இருக்கிறது.உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து பாதுகாப்பிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
பருவநிலை மாற்றத்திலிருந்து நமது விவசாயிகளைப் பாதுகாக்க மீண்டும் அடிப்படைக்கு மற்றும் எதிர்காலத்திற்குப் பயணம் என்ற திட்டத்தில் இந்தியாவின் கவனம் இருக்கிறது. வேளாண்துறையில் உள்ள பெண்களுக்கு சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆதரவு அளிக்கப்படுகிறது.
மக்கள் தொகையில் பெரும் பகுதியை வறுமையிலிருந்து வெளியேற்றி சிறந்த வாழ்க்கை முறைக்கு கொண்டு செல்ல விவசாயம் ஆற்றல் மிக்கதாக விளங்குகிறது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிஷண் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் பண்ணைக்கு சென்ற பார்வையிட்ட பிரதமர் அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்களை ஆய்வு செய்தார். இது குறித்து பின்னர் தமது ட்விட்டர் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.