தங்கத்தின் தேவையானது நடப்பு ஆண்டில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அதிக சேமிப்பு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தேவையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021ம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்தின் தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது.
ஸ்டார்ட் அப் ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. சம்பள உயர்வுடன் கூடிய சலுகைகள்..!
ஓமிக்ரான் தாக்கம்
நாட்டில் தற்போது ஓமிக்ரான் தாக்கம் என்பது அதிகரித்து வந்தாலும், பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்திற்கு ஆதரவு
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்கா – ரஷ்யா இடையேயான பதற்றம், பிட்காயின் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பலவும் தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் தங்க இடிஎஃப்-களிலும் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதற்கிடையில் மற்ற தங்க முதலீடுகளும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
கொரோனாவுக்கு பிறகு மத்திய வங்கிகள் கடுமையான சூழலை எதிர்கொண்டு வருகின்றன. ஆக தங்கம் விலையானது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் வட்டி விகித நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளும் கவனிக்க பட வேண்டிய விஷயங்களாக உள்ளன.
கச்சா எண்ணெய் விலை
அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில் சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது. அதிலும் தற்போது இறக்குமதி குறையலாமோ என்ற அச்சத்தின் மத்தியில், பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comex தங்கம்
கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை. ஒரு ரேஞ்ச் பவுண்டிலேயே இருந்தது. இது கடந்த வாரத் தொடக்கத்தில் திங்கட்கிழமையன்று 1792.80 டாலர்களாக தொடங்கிய தங்கம் விலையானது, அன்றே 1785.80 டாலர்களாக இருந்தது. இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்ச விலையான 1815.80 டாலர்களை தொட்டு பின், 1808.90 டாலர்களாவும் முடிவுற்றது. இது வரும் வாரத்திலும் சற்று சரிவினைக் காணலாம் என்றே தெரிகிறது.
Comex வெள்ளி
வெள்ளி விலையும் வாரத் தொடக்கத்தில் ஏற்றம் காணுவது போல இருந்தாலும், பிற்பாதியில் மீண்டும் சரிவிலனைக் கண்டது. திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 22.505 டாலர்களாக தொடங்கிய வெள்ளி விலை, செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக அன்றே 23.090 டாலர்களையும் தொட்டது. இதே வியாழக்கிழமையன்று 22.050 என்ற குறைந்தபட்ச லெவலை தொட்டு பின்னர், வெள்ளிக்கிழமையன்று முடிவில் 22.508 டாலர்களாகவும் முடிவுற்றது.
MCX தங்கம்
இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது வாரத் தொடக்கத்தில் குறைந்து, பின்னர் அதிகரித்து, வார இறுதியில் மீண்டும் சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராமுகு 47,602 ரூபாயாக தொடங்கிய தங்கம் விலையானது, அன்றே குறைந்தபட்சமாக 47,478 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 48,127 ரூபாயினை எட்டியது. முடிவில் 47,924 ரூபாயாகவும் முடிவடைந்ததுள்ளது. இது வரும் வாரத்திலும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நாளை தொடக்கத்தினை பொறுத்தும் வர்த்தகம் செய்வது நல்லது.
MCX வெள்ளி
வெள்ளியின் விலையானது வார தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கி, பின்னர் சரிவினைக் கண்டு முடிவடைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று கிலோவுக்கு 61,101 ரூபாயாக தொடங்கியது. இது செவ்வாய்கிழமையன்றே அதிகபட்சமாக 62,220 ரூபாயினையும் தொட்டது. குறைந்தபட்சமாக புதன் கிழமையன்று 59,951 ரூபாயாகவும், வெள்ளிக்கிழமையன்று முடிவில் 60,849 ரூபாயாக முடிவடைந்தது.
ஆபரண தங்கம் நிலவரம்
இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லை. இன்று கிராமுக்கு 4543 ரூபாயாகவும், சவரனுக்கு 36,336 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 10 கிராமுக்கு 45,420 ரூபாயாகவும் உள்ளது. இது இந்த வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு 36,216 ரூபாயாகவும் இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு சற்று அதிகரித்துள்ளது.
தூய தங்கம் விலை
இன்று தூய தங்கத்தின் விலையானது 4955 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது இந்த வாரத் தொடக்கத்தில் 49,390 ரூபாயாகவும் இருந்தது. கடந்த ஒரே வாரத்தில் தூய தங்கம் விலையும் சற்று சரிவில் காணப்படுகின்றது.
ஆபரண வெள்ளி
இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 65 ரூபாயாக உள்ளது. இதே 10 கிராமுக்கு 650 ரூபாயாகவும், கிலோவுக்கு 65000 ரூபாயாகவும் உள்ளது. இது நடப்பு வாரத் தொடக்கத்தில் 65,400 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இனி என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளியினை பொறுத்தவரையில் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள், நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம். இதே நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இதே ஆபரணத் தங்கத்தின் தேவையானது தேவையிருக்கும்பட்சத்தில் வாங்கலாம்.
gold price on 6th February 2022: gold demand may reach pre covid levels in current year
gold price on 6th February 2022: gold demand may reach pre covid levels in current year/சூப்பரான வாய்ப்பு.. சாமனியர்களுக்கு இது வாங்க சரியான தருணம்.. ஏன் என்ன காரணம்..!