சென்னை தியாகராய நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பாண்டி பஜாரில் உள்ள ரெயின்போ ஆர்கெட் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கி வந்த துணிக்கடையில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவ்வழியாக சென்ற மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு 4 வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததனர்.
அதே வேளையில் வணிக வளாகத்திற்குள் சிக்கியிருந்த அனைவரும் எந்தவித காயமும் இன்றி மீட்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை துணிக்கடைக்கு விடுமுறை என்பதால் அசம்பாவிதம் நிகழாமல் தவிர்க்கப்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே, வணிக வளாகத்தின் 3ஆவது மாடியில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகர் ஸ்ரீ மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.