தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி அறிவித்தனர். பிரிவை அறிவித்துவிட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள்.
இந்நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிய என்ன காரணம், யார் காரணம் என்று எல்லாம் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே அவ்வப்போது மனஸ்தாபம் ஏற்பட்டு வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் வேலையில் நிம்மதியை தேட ஆரம்பித்துவிட்டார்கள்.
தனுஷ்
படங்களிலும், ஐஸ்வர்ய தன் ஃபிட்னஸ் சென்டர், ஆன்மீகத்திலும் நிம்மதியை தேடி பெற்றிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சனை ஒரு கட்டத்தில் பெரிதாகவே இனியும் சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று பிரிந்துவிட்டார்கள்.
Dhanush:விட்டுக் கொடுக்காத தனுஷ், ஐஸ்வர்யா: ரசிகர்கள் வாழ்த்து
மகன்கள் யாத்ராவும், லிங்காவும் வளர்ந்த பிறகு பிரிந்துவிடலாம் என்று பேசி வைத்திருந்தார்களாம். இந்த விவாகரத்து அறிவிப்பு மற்றவர்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது தான் என்று தனுஷ், ஐஸ்வர்யாவின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆக, தனுஷ்,
ஐஸ்வர்யா
பிரிய அவர்கள் தான் காரணம். பிரச்சனைகளுக்கு இடையே கணவன், மனைவியாக வாழ்வதை விட பிரிந்து நண்பர்களாகிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள்.
அவர்கள் நன்கு யோசித்த முடிவால் இரு குடும்பத்தாரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். எப்படியாவது தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று இரு குடும்பத்தாரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.