திருவாரூர் மாவட்டத்தில் கடித்த பாம்புடன், ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
மன்னார்குடியில் உள்ள அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்த தர்மன், இன்று வீட்டில் குடிபோதையில் படுத்திருந்தார். அப்போது அவரை சாரைப்பாம்பு ஒன்று கடித்ததால், விழித்த அவர், அந்த பாம்பை உயிருடன் கையில் பிடித்துக் கொண்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
கையில் பாம்பு உடன் வந்த தர்மனை கண்டதும் மருத்துவமனை ஊழியர்கள் திகைத்து போயினர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்த அவர்கள், தர்மனை கடித்தது விஷம் இல்லாத சாரைப்பாம்பு என்பதால், அதற்கு ஏற்ப மருந்து, மற்றும் மாத்திரைகளை கொடுத்து அனுப்பினர்.