பழம்பெரும் புகழ்பெற்ற பாடகி
லதா மங்கேஷ்கர்
இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஒருமாதமாகவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த
லதா
இன்று மும்பையில் காலமானார். இவரின் மறைவு இசையுலகிற்கு பேரிழப்பு என திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
லதா திரையுலகில் கிட்டத்தட்ட 70 ஆண்டுக்குமேல் பணியாற்றியுள்ளார். இசைக்குயில் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் லதா 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள லதா தமிழில் மூன்றே பாடல்கள் மட்டும் பாடியுள்ளார்.
மிஷ்கின் எடுக்கப்போகும் புதிய அவதாரம்..பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பு..!
இருப்பினும் அவர்பாடிய அந்த மூன்று பாடல்களும் ரசிகர்களின் மனதில் இன்றளவும் பதிந்துள்ளது. இந்நிலையில் நடிகர்
சிவாஜி
கணேசன் மற்றும் லதா மங்கேஷ்கர் உறவு மிகவும் ஸ்பெஷலானது. சிவாஜி தன் உடன்பிறவா சகோதரியாகவே லதாவை பார்த்துக்கொண்டாராம். சென்னை வரும்போதெல்லாம் லதா தங்குவதற்காக தன் வீட்டிலேயே ஒரு குட்டி பங்களாவை கட்டியுள்ளார் சிவாஜி.
லதா மங்கேஷ்கர் தமிழில் பாடிய முதல் பாடல் இடம்பெற்ற திரைப்படம் ஆனந்த். இப்படத்தை சிவாஜி ப்ரொடக்க்ஷன்ஸ் தான் தயாரித்தது. தயாரிப்பாளர் சிவாஜி என்பதால் இப்படத்திற்கு சம்பளமே வாங்காமல் பாட்டு பாடியுள்ளார் லதா. என் அண்ணன் சிவாஜிக்காக இதுகூட பண்ணவில்லை என்றால் எப்படி என்று கூறி, சம்பளம் வாங்காமல் பாடியிருக்கிறார் லதா.
மேலும் விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகைகளில் சிவாஜியின் குடும்பத்தார் அனைவர்க்கும் புது துணி மற்றும் பலகாரங்களை அனுப்பிவைப்பாராம் லதா. இந்த நடைமுறையை அவர் கடந்தாண்டு வரை பின்பற்றியுள்ளார். சிவாஜி குடும்பத்தாரும் பண்டிகை நாட்களில் லதா குடும்பத்தாருக்கு துணி, மற்றும் பலகாரங்களை அனுப்பிவைப்பார்களாம்.
நடிகர் சிவாஜி மற்றும் லதா நிஜ வாழ்க்கையில் பாசமலராக வாழ்த்து வந்ததை கேட்ட சினிமா ரசிகர்கள் இவர்களின் உறவை போற்றிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கர்ராஜு வெற்றி விழா : நன்றி தெரிவித்த இயக்குனர்!