சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் எங்களின் முழு நோக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தருவதே மக்களுக்கு எங்கள் வாக்குறுதி. நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது ஆளுநரை ஆதரிக்கும் போக்காகவே பார்க்க முடிகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
