மும்பை:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (92) இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் இன்றும் நாளையும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் அவரது இல்லமான பிரபுகஞ்சில் இருந்து மாலையில் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
இதையும் படியுங்கள்…லதா மங்கேஷ்கர் மறைவு- 2 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிப்பு