மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல் தகனம்; நாடு முழுவதும் ரசிகர்கள் அஞ்சலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: மருத்துவமனையில் காலமான பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல், மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டது.

latest tamil news

மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க கடந்த ஜன., 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் மூலம் சுவாசித்து வந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

latest tamil news

ஆனால் நேற்று(பிப்.,05) அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இன்று காலை 8:12 மணியளவில் லதா மங்கேஷ்கர் காலமானார். பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால், அவர் காலமானதாக, சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது உடல் பிற்பகல் 12:30 மணிக்கு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர், ஊர்வலமாக சிவாஜி பூங்காவிற்கு கொண்டு கொண்டு செல்லப்பட்டது.

latest tamil news
latest tamil news

பிரதமர் அஞ்சலி

அங்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சிவாஜி பூங்காவில் மஹா., கவர்னர், முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். லதா மங்கேஷ்கர் உடலுக்கு முப்படைகள் மற்றும் மஹாராஷ்டிர காவல்துறையினர் இறுதி மரியாதை செய்தனர். இதன் பின்னர் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

latest tamil news

இறுதிச்சடங்கில், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பஞ்சாப் மாநில முதல்வர் சரண்சித்சிங் சன்னி மற்றும் மத்திய அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஜ் தாக்கரே, நடிகர்கள் ஷாருக்கான், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.