மிஷ்கின் எடுக்கப்போகும் புதிய அவதாரம்..பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பு..!

தமிழ் சினிமாவில் இயக்கத்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டவர் இயக்குனர்
மிஷ்கின்
. சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனரான மிஸ்கின் தொடர்ந்து
அஞ்சாதே
, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,
துப்பறிவாளன்
போன்ற தனித்துவமான பல படங்களை இயக்கியுள்ளார்.

பொதுவாக பல படங்களில் இருக்கும் கமர்ஷியல் அம்சங்களை தவிர்த்து தன் படங்களில் ஒரு புது கோணத்தில் கதையை நகர்த்தும் முயற்சியில் ஈடுபடுவார் மிஷ்கின். அதில் பல தடவை வெற்றியும் அடைந்துள்ளார். மேலும் காமெடிக்கு பெயர்போன பாண்டியராஜனை அஞ்சாதே படத்தின்முலம் வில்லனாக மாற்றினார்.

சாந்தமான நாயகனாக நடித்துவந்த சேரனை ஆக்க்ஷன் ஹீரோவாக யுத்தம் செய் படத்தில் நடிக்கவைத்தார். இவ்வாறு பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் தன் ஒவ்வொரு படத்திலும் வித்யாசம் காட்டி வருகிறார் மிஷ்கின். கடைசியாக இவர் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த
சைக்கோ
படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம்…ரஜினிக்கு கிடைத்த குட் நியூஸ்..!

அடுத்ததாக விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அப்படப்பிடிப்பின் போது விஷாலுக்கும் இயக்குனர் மிஸ்கினுக்கும் மோதல் வர, மிஷ்கின் அப்படத்தைவிட்டு விலகினார். தற்போது
விஷால்
துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடித்துவருகிறார். இதைத்தவிர தற்போது மிஷ்கின் படங்களிலும் நடித்துவருகிறார்.

சவரகத்தி
போன்ற சில படங்களில் நடிப்பிலும் கலக்கிய மிஷ்கின் தற்போது புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார். தன் தம்பி இயக்கவுள்ள புதிய படம் ஒன்றில் மிஷ்கின் இசையமைக்கவுள்ளார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படத்தைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கிவருகிறார் மிஷ்கின். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷாலினியை வரவேற்ற யாஷிகா ; வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.