கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது சற்றே ஏற்றத்தினை கண்ட நிலையில் 10ல் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது,1,51,456.45 கோடி ரூபாய் அதிகரிப்புள்ளது.
இதில் டிசிஎஸ் நிறுவனம் டாப் கெயினராக உள்ளது. எனினும் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி டாப் லூசர்களாக உள்ளன.
இதற்கிடையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 1444.59 புள்ளிகள் அல்லது 2.52% ஏற்றம் கண்டுள்ளது. அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான காரணிகள் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளது.
வரிச் சலுகையுடன் பாதுகாப்பான வருமானம்.. 5 சிறந்த திட்டங்கள்.. என்னென்ன தெரிஞ்சுக்கோங்க..!

டாப் 10 நிறுவனங்கள்
இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.

டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 46,016.2 கோடி ரூபாய் அதிகரித்து, 14,11,058.63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று குறைந்து, 3814.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மூலதனம் 33,861.41 கோடி ரூபாய் அதிகரித்து, 8,44,922.53 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 0.57% அதிகரித்து, 1524 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 23,425.29 கோடி ரூபாய் அதிகரித்து, 7,32,177.06 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 1741.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் சந்தை மூலதனமானது,17,226.59 கோடி ரூபாய் அதிகரித்து, 4,31,926.08 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.67% அதிகரித்து, 7158.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி வங்கியின் சந்தை மதிப்பானது 16,601.55 கோடி ரூபாய் அதிகரித்து, 5,59,009.41 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.48% குறைந்து, 805.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 6113.36 கோடி ரூபாய் அதிகரித்து, 4,73,182.90 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.81% குறைந்து, 530.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 5850 கோடி ரூபாய் அதிகரித்து, 5,42,262.17 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 2306.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹெச் டி எஃப் சி
ஹெச் டி எஃப் சி-ன் சந்தை மூலதனமானது 2870.45 கோடி ரூபாய் குறைந்து, 4,53,231.97 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஹெச் டி எஃப் சி நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 2503.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 2396.57 கோடி ரூபாய் குறைந்து, 15,77,382.90 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 2331.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
8 of top 10 firms added over Rs.1.51 lakh crore in market capitalization
8 of top 10 firms added over Rs.1.51 lakh crore in market capitalization/ முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. 8 நிறுவனங்கள் ஒரே வாரத்தில் ரூ.1.51 லட்சம் கோடி லாபம்..!