ஆமதாபாத்: ஆமதாபாத்தில் இன்று நடக்கும் முதல் சவாலில் இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்தியா, விண்டீஸ் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று 1,000-வது போட்டியில் விளையாடுகிறது இந்திய அணி. முதல் போட்டி இன்று ஆமதாபாத் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. இதில் இந்திய அணி கேப்டனாக களமிறங்குகியுள்ளார் ரோகித் சர்மா. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதனையடுத்து விண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணி விவரம்
ரோகித்சர்மா, இஷாந்த் கிஷன், விராத் கோஹ்லி, ரிஷப் பன்ட், எஸ் யாதவ், தீபக் ஹூடா, ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், சஹால், கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆமதாபாத்: ஆமதாபாத்தில் இன்று நடக்கும் முதல் சவாலில் இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்ய முடிவு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.