தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 85% வார்டுகளில் திராவிடக் கட்சிகளான ஆளும் திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் நேராடியாக மோதுகின்றன. நேர் மோதுகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பெரும்பாலானவர்கள் மத்தியில் எழுந்த கேள்வி என்றால் அது, திமுக, அதிமுகவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் யார் என்பதுதான். சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மேயர்கள், நகராட்சிக் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதனால், தலைநகர் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு திமுக மற்றும் அதிமுகவில் யார் மேயர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில் திமுகவில் சிற்றரசு, முன்னாள் அமைச்சர் இளம் வழுதியின் மகன் இளைய அருணா, சிற்றரசு மற்றும் இளம்சுருதியையும் அதிமுகவில் முன்னாள் எம்.எல்.ஏ வி. அலேக்சாண்டர் அதிமுக ஆதரவு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் சிவகாமி என ஹெவிவெயிட்களை களம் இறக்கியுள்ளது.
சென்னையில், திமுக களத்தில் செயல்படக்கூடிய இளைய அருணா, சிற்றரசு, முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் இளம்சுருதி முன்னாள் கவுன்சிலரும் முன்னாள் அமைச்சர் கே.பி.சாமி மற்றும் எம்.எல்.ஏ சங்கரின் சகோதரருமான கே.பி. சொக்கலிங்கம், ஆகியோர் கவுன்சிலர்களாக போட்டியிடுகின்றனர்.
அதே போல, சென்னையில், அதிமுக சார்பில், அம்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ வி.அலேக்சாண்டர், அதிமுக ஆதரவு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி மற்றும் 12 முன்னாள் கவுன்சிலர்கள் போட்டியிடுகின்றன. இப்படி தலைநகர் பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆளும் திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் ஹெவி வெயிட்களை களம் இறக்கியுள்ளது.
அதே நேரத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்றத்தேர்தல் மற்று மக்களவைத் தேர்தலைப் போலல்லாமல், உள்ளூர் பிரச்னைகளே முக்கிய பங்கு வகிக்கும். அதனால், நகர்புற உள்ளாட்சித் தேர்ட்தலில், சிறிய கட்சிகள் ஒரு சவாலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கட்சிகள் வாக்கு சதவீதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், நாம் தமிழர் கட்சி நகரங்களில் சராசரியாக 10% வாக்குகளைப் பெற்றது. சீமான் போட்டியிட்ட, திருவொற்றியூரில் 25% வாக்குகளையும் ஆர்.கே. நகரில் 11% வாக்குகளையும் சோழிங்கநல்லூரில் 10% வாக்குகளையும் மற்ற தொகுதிகளில் 8% வாக்குகளையும் பெற்றது.
அதே போல, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, அண்ணாநகர் போன்ற முக்கிய நகரங்களில் 13% வாக்குகளையும், மதுரவாயலில் 12% வாக்குகளையும், வேளச்சேரியில் 13% வாக்குகளையும், மயிலாப்பூரில் 10%, தி நகரில் 11% வாக்குகளையும் விருகம்பாக்கத்தில் 10% வாக்குகளையும் பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளில் சராசரியாக 7-8% வாக்குகளையும் பெற்றது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இருந்தாலும், சிறிய கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் அதிமுகவுக்கு பெரும் அடியை ஏற்படுத்தியது. எங்கெல்லாம் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றதோ, அங்கெல்லாம் அதிமுகவின் வாக்குகள் 30% அல்லது அதற்கும் கீழே குறைந்துள்ளது. திருவொற்றியூரில் அதிமுக 25%, ஆர்கே நகரில் 28%, திருவிக நகரில் 18% (அதிமுக கூட்டணியில் த.மா.கா.), ஆலந்தூரில் 32%, அண்ணாநகரில் 31% வாக்குகளைப் பெற்றுள்ளது.
இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலில் உள்ளூர் பிரச்னைகள் முன்னிறுத்தப்படும் என்பதால் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுகவும் அதிமுகவும் 85% வார்டுகளில் நேரடியாக மோதுகின்றன. அதே நேரத்தில், ஆளும் திமுக முன்னாள் அமைச்சரின் மகன், மகள், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் ஐ.ஏ.எஸ் என ஹெவி வெயிட்களை களம் இறக்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“