அகமதாபாத்: 1000-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இண்டீஸ் அணி 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் சஹல் 4, சுந்தர் 3, பிரசித் 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1000-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது.
