தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 6 ஆயிரத்து 120 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
சென்னையில் மேலும் 972 பேருக்கும், கோவையில் மேலும் 911 பேருக்கும், செங்கல்பட்டில் 531 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 23 ஆயிரத்து 144 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 26 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 828 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.