தனுஷ்
தன் காதல் மனைவியான
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தை பிரிந்துவிட்டார். பிரிவு குறித்து ஜனவரி 17ம் தேதி இருவரும் தனித்தனியே அறிவிப்பு வெளியிட்டனர்.
பிரிவு குறித்து அறிவித்தாலும் முறைப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. அவர்கள் சட்டப்படி விவாகரத்து பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கறிஞர்களை சந்தித்து பேசியிருக்கிறார் தனுஷ் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் அவர் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தவில்லையாம். ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யாமலேயே வாழ்ந்தால் என்ன ஆகும் என்று கேட்டறிந்தாராம்.
வேறு விஷயமாக ஆலோசனை கேட்டாராம். ஐஸ்வர்யாவையும், தனுஷையும் சேர்த்து வைக்க ரஜினி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2 பிள்ளைகளை பற்றி நினைக்காமல் இப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்களே என்று தான் ரஜினி புலம்புகிறாராம். யார் வீட்டில் தான் பிரச்சனை இல்லை. அதற்கெல்லாம் பிரிவு தான் தீர்வா என தன் மகளிடம் கோபித்துக் கொண்டாராம் ரஜினி.
அப்பா இப்படி கோபப்பட்டு பார்க்காத ஐஸ்வர்யா, அவருக்காக மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழ தயாராக இருக்கிறாராம். ஆனால் மீண்டும் சேரும் பேச்சுக்கே இடமில்லை என்கிறாராம் தனுஷ்.
Dhanush:இனி என் வழி, ‘ஆண்டவர்’ வழி: தனுஷ் அதிரடி முடிவு
மேலும் இனி தன் வாழ்க்கையில் திருமணம் என்ற வார்த்தையே இருக்காது என்று ஒரு முடிவு எடுத்திருக்கிறாராம் தனுஷ்.