இன்றைய காலக்கட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு என்பது மிக விருப்பமான முதலீடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
குறிப்பாக இன்றைய முதலீட்டு போர்ட்போலியோக்களில் ஓரிரு எஸ்ஐபி(SIP)கள் ஆவது இருக்கும்.
Budget 2022: நிர்மலா சீதாராமனுக்கு 3 முக்கிய சவால்.. சமாளிக்க முடியுமா..!!
கடந்த சில ஆண்டுகளாகவே சில மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல லாபம் கொடுத்து வருகின்றது. இது வரவிருக்கும் ஆண்டுகளிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிட் கேப் ஃபண்ட்
இன்று நாம் பார்க்கவிருக்கும் ஃபண்டானது 4 ஸ்டார்கள் கொண்ட ஒரு மிட் கேப் ஃபண்டாகும். நடுத்தர நிறுவனத்தினை சேர்ந்த ஒரு பங்காகும். இந்த பங்கில் தான் இந்த பங்கானது முதலீடு செய்யப்படுகின்றது. எனினும் சில மிட் கேப் ஃபண்டுகள் லார்ஜ் கேப் பண்டுகள் மற்றும் சிறிய ரக ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சந்தை மூலதனம் சுமார் 2 பில்லியன் – 10 பில்லியன் டாலராகும்.
நம்பிக்கை
மிட் கேப் ஃபண்டுகள் சற்று பாதுகாப்பானது. இதன் காரணமான இந்த ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எதிர்காலத்தில் பங்குகள் நல்ல வளர்ச்சி காணலாம். எனினும் லார்ஜ் கேப் ஃபண்டுகள் பெரும்பாலும் பாதுகாப்பானவை. ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் நிறுவனங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சியடையலாம் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது.
குவாண்ட் மிட் கேப் ஃபண்ட்
குவாண்ட் மிட் கேப் ஃபண்ட்- டைரக்ட் பிளான் என்பது சிறந்த மிட் கேப் ஃபண்டுகளில் ஒண்றாகும். இந்த ஃபண்டானது எதிர்காலத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஃபண்டின் எக்ஸ்பென்ஸ் ரேசியோ (ER) குறைவாக உள்ளது. இந்த ஃபண்டில் என்.ஏ.வி 130.64 ரூபாயாகும். இதன் ஃபண்ட் அளவு 247.86 ரூபாயாகும்.
வருமானம் எப்படி?
இந்த ஸ்மால் கேப் ஃபண்டானது நீண்டகால நோக்கில் லாபகரமான ஒரு ஃபண்டாக இருந்து வருகின்றது. இது 1 வருடத்தில் 22.26% ஏற்றம் கண்டுள்ளது. இதே 2 வருடத்தில் 69.12% ஏற்றம் கண்டுள்ளது. இதே 3 வருடத்தில் 92.15% லாபம் கொடுத்துள்ளது. இதே 5 ஆண்டுகளில் 111.81% ஏற்றம் கண்டுள்ளது. எஸ்ஐபி மூலமான முதலீடு செய்திருந்தால் 2 வருடத்தில் 59.77% வருமானமும், இதே 1 வருடத்தில் 42.45% வருமானம் கிடைத்துள்ளது.
போர்ட்போலியோ
இந்த ஸ்மால் கேப் ஃபண்டில் 97.96% ஈக்விட்டியிலும், 2.04% மற்ற முதலீடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் லார்ஜ் கேப் இன்வெஸ்ட்ம்மென்ட்ஸ் 28.89%மும், இதே மிட்கேப் ஃபண்டில் 46.4%மும், ஸ்மால் கேப் முதலீட்டில் 10.89%மும்11.78% மற்ற ஃபண்டுகளிலும் முதலீடு செய்துள்ளது.
டாப் 10 ஹோல்டிங்
இதில் டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட், ஐடிசி, அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், அதானி எண்டர்பிரைசஸ், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 24 பங்குகளை ஹோல்டிங் செய்துள்ளது.
This mid cap fund SIP recorded upto 112% returns
This mid cap fund SIP recorded upto 112% returns/SIP-யில் 112% லாபமா? அப்படி என்ன ஃபண்ட் அது.. நீங்க வைத்திருக்கீங்களா?