கொல்கத்தா:
உத்தர பிரதேச சட்ட மன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சிக்கு திரினாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து அகிலேஷ் உடன் இணைந்து பிரச்சாரம் செய்ய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் லக்னோ சென்றுள்ளார். முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மம்தா பேசியதாவது:
உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சியை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் ( காங்கிரஸ் ) வெற்றி பெற மாட்டார்கள். எனவே வேறு ஒருவருக்கு செல்லும் வாக்குகளை அவர்கள் ஏன் தடுக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியை சமாதானப் படுத்த நாங்கள் முயற்சி செய்தோம் ஆனால் அவர்கள் கேட்கவில்லை.அகிலேஷ் யாதவுடன் ஒவ்வொரு சமூகமும்,ஒவ்வொரு வாக்காளரும் இருந்தால், அவர் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
கூட்டணிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேசியதாகவும் அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. திரிணாமுல் நம்பிக்கையற்ற கூட்டாளி என காங்கிரஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்… அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு – காங்கிரஸ் பிரதிநிதியாக வீரப்ப மொய்லி நியமனம்