சென்னை வேளச்சேரியில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
இன்று காலை வேளச்சேரி 100 அடி சாலையில் கஸ்தூரி என்பவர் கடைக்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார். சாலையின் இருபுறத்தை சரிவர கவனிக்காமல் கஸ்தூரி சென்ற நிலையில், அவ்வழியாக வந்த ஸ்கூட்டர் ஒன்று அவர் மீது வேகமாக மோதியது.
இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கஸ்தூரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். சாலையில் நடந்து செல்வோரை கவனிக்காமல் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டி ராஜாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.