ஆபாச வீடியோ காட்டி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் செய்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். மாணவியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்போது டாக்டர் மோகன்குமார் என்பவர் அந்த சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். இதனை அந்த மாணவி அவரது தந்தையிடம் கூறியுள்ளார். அவர் தந்தை மனைவியை கண்டித்துள்ளார்.
ஆனால் மோகன்ராஜ், ஆன்லைனில் வகுப்புகள் நடக்கும் போது ஆபாச வீடியோவை காட்டி அந்த மாணவியிடம் காட்டியுள்ளார். மேலும், அவரது அம்மாவுடன் நெருக்கமாக இருந்த போட்டோவை காண்பித்து, நீயும் என்னுடன் இதே போல நெருக்கமாக இரு என கூறியுள்ளார்.
இதனை அந்த மாணவி மறுக்கவே அவரை அடித்துள்ளார். இதனை அடுத்து 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாணவி அவரது தம்பி, தங்கையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது டாக்டர் மோகன்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என மாணவி ஆன்லைன் வாயிலாக காவல்துறைக்கு புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையின் மோகன் ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.