சுங்கத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதை மேற்பார்வையிட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்றையும் நியமித்துள்ளார்