'ஆட்சி போனாலும் காங்கிரசின் ஆணவம் குறையவில்லை!' – பிரதமர் மோடி ஆவேசம்!

பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பறிபோனாலும் அக்கட்சியின் ஆணவம் மட்டும் குறையவில்லை என, நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்து உள்ளார்.

நாடாளுமன்ற
பட்ஜெட் கூட்டத்தொடர்
, கடந்த 31 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2022 – 23 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரைக்கு நன்றி தெரிவித்தும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற மக்களவையிில் பேசியதாவது:

குடியரசுத் தலைவர் உரை மீது விவாதங்களை முன்வைத்த உறுப்பினர்களுக்கு நன்றி. கொரோனா தொற்றுக்கு பிறகு, இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். முழு அர்ப்பணிப்புடன் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். ஏழைகளுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. இதனால் ஏழைகள் லட்சாதிபதிகள் போன்று உணர்கின்றனர். இதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்கு பிறகு ஏழைகளின் வீடுகளில் மின்சாரத்தை பார்க்கிறோம். ஏழைகளுக்கு சுத்தமான குடிநீர், காஸ் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. சேவைகளை வழங்குவதில் நேரடி மானியத் திட்டம் பெரும் உதவியாக உள்ளது. ஏழைகளுக்கும் வங்கி கணக்கு வசதி கிடைக்க பெற்றுள்ளது. 50 ஆண்டுகளாக நீங்களும் (காங்கிரஸ்) நாங்கள் இப்போது இருந்த இடத்தில் இருந்துள்ளீர்கள். என்ன செய்தீர்கள்? பா.ஜ.க., ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட மாற்றத்தை சிலர் பார்க்க மறுக்கின்றனர்.

24 ஆண்டுகளுக்கு முன்பு நாகாலாந்து மக்கள் காங்கிரசுக்கு ஓட்டளித்தனர். கோவாவில் 28 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. 1962 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. தெலங்கானா உருவாக்கப்பட்டதில் இருந்து உங்களை (காங்.,) ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

உத்தர பிரதேசம், பீகார், குஜராத் போன்ற பல மாநிலங்களும் காங்கிரசை புறந்தள்ளி உள்ளனர். நேர்மையானவர்கள் யார், சேவை செய்பவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். மிகப் பழமையான காங்கிரஸ் கட்சி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்று ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பல மாநிலங்களில் கைவிட்டு போன பிறகும் கூட அகங்காரம் குறையவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.