சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியாவில் மிகவும் பிரபலமான வாட்டர் டாங்க் தயாரிக்கும் பிராண்டு தான். ஆனால் 2017ல் வாட்டர் டாங்க் தயாரிக்கும் வர்த்தகம் மற்றும் அனைத்து சொத்துக்களையும் சின்டெக்ஸ் பிளாஸ்டிக் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்திற்குத் தனியாகப் பிரிக்கப்பட்டது.
Budget 2022: நிர்மலா சீதாராமனுக்கு 3 முக்கிய சவால்.. சமாளிக்க முடியுமா..!!
இதன் மூலம் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தற்போது டெக்ஸ்டைல்ஸ் மற்றும் யார்ன் (நூல்) தயாரிப்பு வர்த்தகம் மட்டுமே உள்ளது.

7,534.6 கோடி ரூபாய் கடன்
இந்த வழக்கின் விசாரணையில் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 27 நிதி நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய 7,534.6 கோடி ரூபாய் அளவிலான கடனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 2021ல் இந்நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்கப்பட்டு, தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சின்டெக்ஸ் நிறுவனம்
தற்போது சின்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட 4 நிறுவனங்கள் இறுதி ஏல விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. விரைவில் இதற்கான முடிவை வங்கி குழு வழங்க உள்ளது

ACRE உடன் கூட்டணி
முகேஷ் அம்பானி சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தனியாகக் கைப்பற்றாமல் ACRE என்னும் நிறுவன மறுசீரமைப்பு நிறுவனத்துடன் இணைந்து கைப்பற்ற உள்ளது. இதேபோலத் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அலோக் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தை ஜேஎம் பைனான்சியல் நிறுவனத்துடன் இணைந்து கைப்பற்றியது.

4 நிறுவனங்கள்
சிண்டெக்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட வெல்ஸ்பன் குழுமத்தின் ஈசிகோ டெக்ஸ்டைல்ஸ், GHCL, Himatsingka வென்சர்ஸ் என மொத்தம் 4 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளது. இந்த ஏலத்தில் யார் அதிக தொகையை கோரியுள்ள நிறுவனத்திற்கு அளிக்கப்படும்
Sintex Industries insolvency in final stages, 4 companies submitted bids
Sintex Industries insolvency in final stages, 4 companies submitted bids இறுதிகட்டத்தை எட்டிய சின்டெக்ஸ்.. முகேஷ் அம்பானிக்கு கிடைக்குமா..?!