வாஷிங்டன்-உக்ரைன் எல்லைப் பகுதியில் 70 சதவீத ரஷ்ய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்புகிறது.இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை அடுத்து உக்ரைன் எல்லையில் ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்தது.
பின், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ராணுவ வீரர்களையும், போர்க் கப்பல்கள் மற்றும்போர் விமானங்களையும்அனுப்பி வைத்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தின் 70 சதவீத ராணுவ வீரர்கள் உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வரும் வாரங்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவுடன், உக்ரைன் மீது ரஷ்ய வீரர்கள் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாஷிங்டன்-உக்ரைன் எல்லைப் பகுதியில் 70 சதவீத ரஷ்ய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.