நடிகர்
விஜய்
நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் பீஸ்ட். இப்படத்தை
நெல்சன்
இயக்கியுள்ளார்.
அனிருத்
இசையமைக்கும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் படக்குழுவினரை
பீஸ்ட்
அப்டேட் கேட்டு அன்பு தொல்லை செய்தனர்.
பல நாட்களாக எந்த அறிவிப்பும் வராத நிலையில் இன்று பீஸ்ட் படத்தின் அப்டேட் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இதனால் காலை முதலே ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் பொறுமைக்கு ஏற்ற பரிசாக இன்று பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாகிவுள்ளது.
ஐஸ்வர்யாவிற்கு கிடைத்த ஆறுதல் செய்தி..!தற்போது எங்கு இருக்கிறார் தெரியுமா ?
படத்திலிருந்து
அரபிக் குத்து
எனும் பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு ப்ரோமோவுடன் அறிவித்துள்ளது. டாக்டர் படத்தைப்போல இப்படத்திற்கும் நெல்சனின் தனி ஸ்டைலில் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ப்ரோமோவில் அனிருத் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனும் இருந்தனர்.
மேலும் இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இதைத்தவிர நடிகர் விஜய்யும் இந்த ப்ரோமோவில் இடப்பெற்றிருந்தார் விஜய். நேரடியாக வரவில்லை என்றாலும் விஜய் போனில் பேசியதுபோல் இந்த ப்ரோமோ அமைக்கப்பட்டுள்ளது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் ப்ரோமோவில் விஜய்யின் குரல் வந்தது அனைவர்க்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கலகலப்பாக வெளியான இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் தீயாய் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!