தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிந்துவிட்டதால்
ரஜினிகாந்த்
கவலையில் இருக்கிறாராம். மகன்கள் யாத்ரா, லிங்காவை நினைத்துப் பார்த்தீர்களா?. உங்கள் வாழ்க்கை, உங்கள் சந்தோஷம் தான் முக்கியம் என்று ஒரு முடிவு எடுத்துவிட்டீர்களே.
பிள்ளைகளின் நலன் கருதி மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினி கூறி வருகிறாராம். விவாகரத்து முடிவை எடுத்ததால் தன் செல்ல மகள்
ஐஸ்வர்யா
மீது கோபத்தில் இருக்கிறாராம் ரஜினி.
இந்த கவலையை எல்லாம் மறக்க முடியாவிட்டாலும் தன் கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்தார் ரஜினி என்று கூறப்பட்டது. முடிவு எடுத்தாலும் தன்னால் இந்த நிலையில் படங்களில் கவனம் செலுத்த முடியாது என்கிறாராம் ரஜினி.
ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை கேட்டு அழுத பெற்றோர்
இதையடுத்து இந்த பிரச்சனை எல்லாம் தீரும் வரை அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வது இல்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ரஜினி.
ஆனால் தனுஷோ, தன் கவனத்தை திசை திருப்ப அடுத்தடுத்து புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார். மனைவியை பிரிந்த கையோடு வாத்தி படத்தில் நடித்து வருகிறார். கவலைக்கு இடையே தனுஷால் படங்களில் கவனம் செலுத்த முடிகிறது. ஆனால் தன்னால் முடியாது என்கிறாராம் ரஜினி.
தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.