டெல்லி: சமையல் சிலிண்டர் விலையை அரசே நிர்ணயம் செய்கிறது என மாநிலங்களவையில் மத்தியஅரசு தகவல் தெரிவித்து உள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற மாநிலங்களை விவாதத்தின்போது சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது. சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் சர்வதேச சந்தை மாற்றத்தால் மக்கள் பாதிக்காத வகையில், அரசே நிர்ணயம் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022 ஜனவரி வரை இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை 382 முறை உயர்த்தப்பட்டு உள்ளது, அதுபோல சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து 253 முறை குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமையல் எரிவாயு விலை 29 முறை உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், 11 முறை குறைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், சர்வதேச சந்தை மாற்றத்தால் மக்கள் பாதிக்காத வகையில், அரசே நிர்ணயம் செய்து வருவதாகவும் கூறியுள்ளது.