திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்-ல், மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள இந்த ஏடிஎம்-மிற்கு நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவின் இணைப்பை துண்டித்து விட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளை கும்பல் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் தகவலறிந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர் குழுவினருடன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.