ஒன்றாக லன்ச் சாப்பிட்ட சமந்தா, வரலட்சுமி
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சில நடிகைகள் மட்டுமே நடித்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த சமந்தா. சென்னையைச் சேர்ந்த மற்றொரு நடிகையான வரலட்சுமி சரத்குமார், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லி கதாபாத்திரம் என பல விதங்களில் நடித்து வருகிறார்.
சமந்தா தற்போது நடித்து வரும் 'யசோதா' என்ற தெலுங்குப் படத்தில் வரலட்சமியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. கிடைத்த ஓய்வு நேரத்தில் நேற்று சமந்தா, வரலட்சுமி, படத்தின் ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனரான நீரஜா கோனா ஆகியோர் ஐதராபாத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் ஒன்றாக லன்ச் சாப்பிட்டுள்ளார்கள். என்னென்ன சாப்பிட்டோம் என்பதையும் புகைப்படம் எடுத்தும் வெளியிட்டுள்ளார்கள். மூவரும் எடுத்துக் கொண்ட செல்பி மற்றும் புகைப்படங்களை மூவருமே அவரவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.
விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் சமந்தா தமிழில் நடித்துள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படம் தவிர சில புது தமிழ்ப் படங்களிலும் சமந்தா நடிக்க உள்ளார். வரலட்சுமி சரத்குமார் ஐந்தாறு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.