ஐந்து மாநில சட்டபேரவைத் தேர்தையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம், கிதாரி பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, டெல்லி திரும்பும் வழியில் அசாதுதீன் ஒவைசியின் காரை நோக்கி மர்ம நபர்கள் சுட்டதாகக் ஒரு தகவல் வெளியானது. அதனால், அவர் வந்த கார் பஞ்சர் ஆனதாகவும், அதன் பிறகு, தான் பாதுகாப்பாக மற்றொரு காரில் திரும்பியதாகவும் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் `இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, ஓவைசியின் கார் மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், “இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத 2 நபர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒவைசியின் வாகனத்தின் மீது 3 குண்டுகள் பாய்ந்துள்ளன. ஓவைசிக்கு ‘இஸட் பிரிவு’ பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அந்த பாதுகாப்பை ஏற்க மறுத்துவிட்டார். மத்திய அரசு வழங்கும் ‘இஸட் பிரிவு’ பாதுகாப்பை ஏற்க வலியுறுத்துகிறேன்” என்று கூறினார்.
Also Read: ஓ.பி.எஸ்ஸுக்கு `ஒய்’; ஸ்டாலினுக்கு இசட்! – பாதுகாப்பு படையை வாபஸ் வாங்கிய மத்திய அரசு?