தெலுங்கு நடிகரான
நாக சைதன்யா
பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ஆமீர் கானின் லால் சிங் சட்டா படம் மூலம் தான் பாலிவுட் சென்றிருக்கிறார் நாக சைதன்யா. ஆமீர் கானின் நண்பராக நடித்திருக்கிறார்.
அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதியை தான் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அதன் பிறகு விஜய் சேதுபதி விலகவே அந்த வாய்ப்பு நாக சைதன்யாவுக்கு கிடைத்தது.
ஃபாரஸ்ட் கம்ப் ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த லால் சிங் சட்டா என்பது குறிப்பிடத்தக்கது.
லால் சிங் சட்டா படத்தில் நடித்தது குறித்து நாக சைதன்யா கூறியிருப்பதாவது,
என் கெரியர் துவங்கியதில் இருந்தே தென்னிந்திய ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் சிறுவனாக இருந்தபோது ஃபாரஸ்ட் கம்ப் படத்தை பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
வளர்ந்த பிறகு அந்த படத்தின் ரீமேக்கில் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. என் கதாபாத்திரம் சவாலானது. இந்தி ரசிகர்களுக்கு ஏற்ப என் கதாபாத்திரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. கார்கிலில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அதை எல்லாம் மறக்க முடியாது.
ஆமீர் கானால் தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அவருடன் சேர்ந்து நடித்து, நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அந்த படத்தில் நடித்த அனுபவம் மேஜிக்கலானது என்றார்.
Fact Check:லதா மங்கேஷ்கர் உடல் மீது எச்சில் துப்பினாரா நடிகர் ஷாருக்கான்?