டெல்லி: 2014-2020ல் பணவீக்க விகிதம் 5%க்கும் குறைவாக உள்ளது என மக்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். எதிர்க்கட்சிகள் பணவீக்கப் பிரச்சினையை இங்கு எழுப்பியுள்ளன, அவர்கள் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போதே இந்த விஷயத்தை எழுப்பினால் நன்றாக இருந்து இருக்கும். கொரோன தொற்று காலத்திலும் எங்கள் அரசாங்கம் பணவீக்கத்தை சமாளிக்க முயற்சிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 31 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2022 – 23 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரைக்கு நன்றி தெரிவித்தும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற மக்களவையிில் பேசியதாவது:* குடியரசுத் தலைவர் உரை மீது விவாதங்களை முன்வைத்த உறுப்பினர்களுக்கு நன்றி. * கொரோனா தொற்றுக்கு பிறகு, இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. * இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். முழு அர்ப்பணிப்புடன் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். * ஏழைகளுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. இதனால் ஏழைகள் லட்சாதிபதிகள் போன்று உணர்கின்றனர். இதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது* 2014-2020ல் பணவீக்க விகிதம் 5%க்கும் குறைவாக உள்ளது.* பிபின் ராவத் மரணத்திற்கு வழிநெடுக்கிலும் நின்று மரியாதை செலுத்திய தமிழர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்* உபி யோகி ஆட்சியில்தான்,பெண்கள் பெண் குழந்தைகள், பாதுகாப்பாக உள்ளனர்* கொரோனா தொற்றின்போது மும்பையிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் வெளியேற காங்கிரஸ் இலவச ரயில் டிக்கெட்டுகளையும், டெல்லி அரசு பேருந்து வசதியையும் செய்து கொடுத்தது.* கடந்த 50 வருடங்களில் இப்படிப்பட்ட வளர்ச்சியை யாரும் கண்டது இல்லை