சென்னை:
கொரோனா
2-வது அலையில் டெல்டா வகை வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
அதேநேரம் அதன் இன்னொரு வகை உருமாற்றமான ஒமைக்ரான் 3-வது அலையாக பரவிக் கொண்டிருக்கிறது.
இதன் பரவுதல் வேகம் அதிகமாக இருந்தாலும் பாதிப்புகள் குறைவு என்பது நிம்மதியான விசயம்.
இந்த நிலையில் இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்து வருகிறது. வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்காக கட்சி தொண்டர்கள் திரண்டு வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.
கொரோனா
கட்டுப்பாடு காரணமாக வேட்பாளர்கள் 3 பேருடன் வீடு வீடாக சென்று வாக்கு கேட்கலாம். உள் அரங்க கூட்டத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் கவனமாக இருக்காவிட்டால்
கொரோனா
பரவும் ஆபத்து இருப்பதாக பிரபல வைராலஜிஸ்டு டாக்டர் ஜேக்கப்ஜான் கூறினார்.