லண்டன்-கொரோனா ஊரடங்கின் போது நடந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் விருந்தில் பங்கேற்றதாக, அந்நாட்டின் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஒப்புக் கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவத்துவங்கிய போது, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் 2020ல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. குற்றச்சாட்டுஅப்போது ஜூன் மாதம் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் வந்தது. இதற்காக லண்டனில் உள்ள எண்: 10, டவுனிங் தெரு என்ற முகவரியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில்,பிறந்த நாள் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடக்கும் அறையில் விருந்து நடந்ததாக கூறப்படுகிறது.
இதில் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.நாட்டு மக்கள் கொரோனா அச்சத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் நடந்த இந்த விருந்து அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமரை பதவி விலக கோரும் அளவுக்கு விவகாரம் தீவிரம் அடைந்து உள்ளது.பிரதமரின் கொள்கைகள் குழு தலைவர் முனிரா மிர்ஸா, முதன்மை செயலர் டான் ரோசன்பீல்ட், முதன்மை தனி செயலர் மார்டின் ரேணாட்ஸ், மக்கள் தொடர்பு இயக்குனர் ஜாக் டாய்ல் உள்ளிட்டோர் விருந்தில் பங்கேற்றதை ஒப்புக் கொண்டு பதவி விலகினர்.
இந்நிலையில் பிரிட்டன் நிதி அமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக், பிரதமரின் விருந்தில் பங்கேற்றதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் கொரோனா தொற்று பரவல் குறித்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் இல்லத்திற்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.விருந்து நிகழ்ச்சிகள்’இன்போசிஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக் ஷதா மூர்த்தியின் கணவரான ரிஷி
சுனக், பிரதமர் போரிஸ் ஜான்சனின் இல்லத்துக்கு அடுத்துள்ள வீட்டில் வசிக்கிறார்.கொரோனா ஊரடங்கின் போது டவுனிங் தெருவில் நடந்த 12 விருந்து நிகழ்ச்சிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் ஆறு விருந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
Advertisement