திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் (13ம் தேதி) முதல் 17ம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகம் மற்றும் படிபூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் இந்த 5 நாட்களிலும் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 17ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும்.