சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(07) காலை ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக நோயாளிகள் கடும் அசௌகரியங்களைச் சந்தித்துள்ளனர்.
தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க தாமதித்ததால் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள நேர்ந்ததாக அந்தத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கை எந்தவிதத்திலும் நியாயமானதல்ல என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க தலைவர் சங்கைக்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகளில் சிலவற்றுக்கு தீர்வு வழங்க ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாதியர் சார்ந்த பல கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.