புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளான ஜனவரி 31 அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் மத்திய அரசு குறித்து கடும் விமர்சனம் செய்தனர்.
இதற்கிடையே, மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர இன்று மோடி பதில் அளித்து பேசினார்.
இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர பதில் அளித்து பேசுகிறார்.
இதையும் படியுங்கள்…இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கு ராணி பட்டம் இங்கிலாந்து ராணி விருப்பம்