சென்னை:
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி தங்கள் வசம் வைத்து இருந்தது. இந்த படகுகளை விடுவிக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் அதனை வலியுறுத்தின.
இதற்கிடையே, இந்த படகுகளை ஏலம் விடும் பணி இன்று தொடங்கியது. முதல் கட்டமாக 65 படகுகள் இன்று ஏலம் விடப்படுகின்றன. இலங்கையில் உள்ள காரை நகரில் ஏலம் விடுவதற்கான பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற படகுகளும் ஏலம் விடப்படுகின்றன. வரும் 11-ம் தேதிக்குள் மீதமுள்ள அனைத்து படகுகளையும் ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் முயற்சிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படியுங்கள்…இந்தியா- இலங்கை வெளியுறவு மந்திரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை