தமிழ்நாடு – கர்நாடகா இடையே சுமூக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து மக்களவையில் கர்நாடக எம்.பி. பிரஜ்வால் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார், மத்திய அரசுக்கு கிடைக்கப் பெற்ற சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் மேகதாது திட்டத்தின் மூலம் மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், சங்கமா, மடவாளா, முத்தாதி உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர், சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீர் வள அமைச்சகமும், காவிரி மேலாண்மை ஆணையமும் திட்ட அறிக்கையை ஏற்ற பிறகே சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்யும் என குறிப்பிட்டார்.