தான் முதல் காதலை பற்றி மனம் திறந்த வனிதா…!

வனிதாவிஜயகுமார்தமிழ் திரைப்பட
நடிகை
, தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். இவர் 1995-ஆம் ஆண்டு “சந்திரலேகா” என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

வனிதா தமிழ், மலையாளம் மற்றும்
தெலுங்கு
திரைப்படங்களில் பணியாற்றி தென்னிந்திய நடிகையாக பிரபலமானவர்.வனிதா பிறப்பால் ஒரு திரைக்குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை விஜயகுமார் புகழ் பெற்ற தென்னிந்திய நடிகர் ஆவார். இவர் தென்னிந்திய திரைப்படங்களில் 1980 -ஆம் ஆண்டுகளில் இருந்து துணை கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து புகழ் பிரபலமானவர்.

பல நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினி..எங்கு சென்றுள்ளார் தெரியுமா?

இவரின் தாய் மஞ்சுளா விஜயகுமார் தென்னிந்திய திரைப்படத்தில் நடிகை, எழுத்தாளர், பாடகர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர்.தென்னிந்திய திரை ஜாம்பவான்களான விஜயகுமார் – மஞ்சுளா விஜயகுமார் என்பவர்களுக்கு மூத்த மகளாக பிறந்த வனிதா, சிறுவயதில் இருந்து திரைப்படங்கள் மற்றும் திரையுலக சார்ந்துள்ள பல திறமைகளில் ஆர்வம் கொண்டு அதனை கற்று வந்துள்ளார்.

இவருக்கு இரண்டு தங்கையும், ஒரு தமையனும் உள்ளார். இவரது தங்கையான ஸ்ரீதேவி , மற்றும் பீரித்தா தமிழ் திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளனர். இவரது தம்பியான அருண்விஜய் புகழ் பெற்ற ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.வனிதா விஜயகுமார் பிறப்பால் ஒரு திரைக்குடும்பத்தை சேர்ந்தவர், இவர் 1995-ஆம் ஆண்டு வெளியாகியுள்ள சந்திரலேகை என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.

ஆனால் இத்திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவராமல் பெரும் தோல்வியை சந்தித்தது. பின்னர் நடிகர் ராஜ்கிரண் மாணிக்கம் என்ற திரைப்படத்தில் 1996-ஆம் ஆண்டு நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படமும் தோல்வியை சந்தித்தது.தமிழ் திரைப்படம் இவருக்கு வலுவான அங்கீகாரத்தினை அளிக்காததால், இவர் 1997-ஆம் ஆண்டு மலையாள திரைப்படங்களிலும், 1999-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து தென்னிந்திய நடிகையாக

புகழ் பெற்றார். இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். பின்னர் அதே ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா என்னும் நாடக தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.குக் வித் கோமாளி,
கலக்க போவது யாரு
என பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், நடிவராகவும் பணியாற்றி உள்ளார்.

1995 முதல் 1999ஆம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், பின்னர் நடிகர் ஆனந்த் என்னும் திரைப்பட துணை கதாபாத்திர நடிகரை 2000ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.தற்போது நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய காதல் வாழ்க்கை பற்றி கூறிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.